தணிக்கை போலீசாருக்கு ஓய்வு அறை திறப்பு
பெரம்பலூர், ஆக. 21: பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெரம்பலூர் நான்கு ரோடு மற்றும் தண்ணீர்பந்தல் பகுதியில் வாகன தணிக்கை செய்யும் காவலர்களின் நலன் கருதி காவலர்களுக்கு ஓய்வு எடுக்க, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா ஓய்வு அறைகளைத் திறந்து வைத்தார். அப்போது பெரம்பலூர் உட்கோட்ட டிஎஸ்பி ஆரோக்கியராஜ், பெரம்பலூர் டவுன் இன்ஸ் பெக்டர் சதீஷ்குமார், பெரம்பலூர் டவுன் டிராபிக் இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் சப்.இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.
Advertisement
Advertisement