ஜெயங்கொண்டம் அரசு கல்லூரியில் மாணவர்கள் சமூக நீதி நாள் உறுதியேற்பு
ஜெயங்கொண்டம், செப்.18: ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் ராசமூர்த்தி உறுதி மொழியை வாசிக்க அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
Advertisement
Advertisement