கல்லை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சர்வதேச இயற்கை பேரிடர் தினம்
குன்னம்,அக்.17: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கல்லை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஜே.ஆர்.சி சார்பில் சர்வதேச இயற்கை பேரிடர் குறைப்பு தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொ)சி. மருதமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் ஜே.ஆர்.சி கவுன்சிலர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவில் வேப்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையை சார்ந்த பால்துரை சிறப்பு நிலை அலுவலர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு பேரிடர் மேலாண்மை மற்றும் விபத்தில்லா தீபாவளி பற்றியும் செயல் விளக்கம் அளித்தனர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஐ.ஆர்.சி.எஸ் மாவட்ட கௌரவ செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
ஐ.ஆர்.சி.எஸ் மாவட்ட பொருளாளர் ஜோதிவேல் ஜே.ஆர்.சி மாவட்ட கன்வீனர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சுப்ரமணியன், கற்பகம் ஆகியோரும் மற்றும் பள்ளியின் அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். விழாவின் முடிவில் இராமச்சந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்