அன்புமணி தலைமையில் பாமக தேர்தல் ஆணையம் அங்கீகாரம்
ஜெயங்கொண்டம், செப்.16: ஜெயங்கொண்டத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதை அடுத்து பாமகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.பாட்டாளி மக்கள் கட்சியில் கடந்த சில மாதங்களாக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு பாட்டாளி மக்கள் கட்சி இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது இந்நிலையில், நேற்று தேர்தல் ஆணையம் அன்புமணி தலைமையிலான பாமகவை அங்கீகரித்து, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளதாக பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். அதனை அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பு தலைவர் திருமாவளவன் ஆகியோர் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதில், பாமக நகர செயலாளர் மாதவன்தேவா உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.