அரியலூரில் அண்ணாசிலைக்கு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
அரியலூர், செப். 16: அரியலூரில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாளையொட்டி, மதிமுக, எம்ஜிஆர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் 117வது பிறந்தநாளயொட்டி, அரியலூர் மாவட்ட மதிமுக சார்பில், சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா தலைமையில் அக்கட்சியினர், நகராட்சி பேருந்து நிலையம் அருகேயுள்ள, அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில், அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் ராமநாதன் , தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேல், அரியலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், அரியலூர் நகர செயலாளர் மனோகரன், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக எம்ஜிஆர் கழகம் சார்பில், கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் மோகன் உள்ளிட்டோர், அண்ணா வின் திருவுருவ சிலைக்கு, அவரது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.