முதன்மை கல்வி அலுவலர் தகவல் அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் விழிப்புணர்வு
அரியலூர், செப். 15: அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் மூன்றாம் கட்டமாக தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாவட்ட அளவிலான விளக்க கூட்டம் நடந்தது.
அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கம் எதிரில் அமைந்துள்ள தனியார் மினி மஹாலில் நடைபெற்ற கூட்டம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாவட்டங்களில் உட்கோட்டம், நகர்புறம் மற்றும் வட்டார அளவிலான ஓரிட சேவை மையங்கள் (One Stop Centre) அமைய இருப்பது தொடர்பாகவும், அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சி மற்றும் சிகிச்சைகள் தொடர்பான நோக்குநிலை விளக்க கூட்டம் ஆகும். இந்த கூட்டத்திற்கு, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உதவி இயக்குநர் இரவீந்திரன், மாநில திட்ட மேலாளர் இராசராசன், மாநில திட்ட மேலாளர் சங்கர் சகாயராஜ் திட்ட விளக்க உரையாற்றினாளர். இக்கூட்டத்திற்கு, பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் நல சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு உரிமைகள் திட்ட முன்களப்பணியாளர்கள் ஆக மொத்தம் 145 நபர்கள் இவ்விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டனர்.