கிருஷ்ணாபுரத்தில் நாளை மின் நிறுத்தம்
Advertisement
பெரம்பலூர், செப்.15: கிருஷ்ணாபுரத்தில் நாளை மின் நிறுத்தம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா கிருஷ்ணாபுரம் 110 கி.வோ. தொகுப்பு துணை மின் நிலையத்தில் நாளை 16ஆம் தேதி (செவ்வாய்கிழமை) திட்டமிடப்பட்டிருந்த மாதாந்திர பராமரிப்பு பணியானது, பொதுமக்கள் நலன் கருதி, ரத்து செய்யப்படுகிறது. எனவே, கிருஷ்ணாபுரம் 110 கி.வோ. தொகுப்பு துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகிக்கப்படும் அனைத்து ஊர்களுக்கும் நாளை 16ஆம் தேதி (செவ்வாய்கிழமை) அன்று வழக்கம்போல் தடையில்லா மின்விநியோகம் இருக்கும் என உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Advertisement