பொதுத்துறையை தனியார் மயமாக்க எதிர்ப்பு அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர், ஆக.15: பெரம்பலூர் புது பஸ்டாண்டு அருகில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இந்தியா இறையாண்மையை நிலை நிறுத்த வேண்டும். இந்தியா-இங்கிலாந்து சிஇடிஏ ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இனி எந்த ரகசிய வர்த்தக ஒப்பந்தமும் செய்யக்கூடாது. பொதுத் துறை, நிறுவனங்களை, பொது சேவைகளையும் தனியார் மயப்படுத்துவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியூ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின், தொமுச அமைப்பு செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.