பெண்களை தாக்கிய விவசாயி கைது
தா.பழூர், அக்.14: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன்(38). இவரது ஆடுகள், அருகேயுள்ள செட்டித்திருக்கோணம் புதுத் தெருவை சேர்ந்தவர் அழகுதுரை(33 ) என்பவரது வயலில் மேய்ந்ததுள்ளது. இதுதொடர்பாக, இரு குடும்பத்திற்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், சௌந்தர்ராஜனின் வீட்டிற்கு அழகுதுரை சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த சௌந்தர்ராஜனின் மனைவி கோமதி மற்றும் சௌந்தரராஜனின் அண்ணி இளவரசி ஆகியோர் அழகுத்துரையைப் பார்த்து ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அழகு துரை உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி திட்டி, கையில் வைத்திருந்த மண்வெட்டியால் கோமதி மற்றும் இளவரசியை அழகுதுரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த கோமதி மற்றும் இளவரசி இருவரும் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அழகுதுரையை கைது செய்தனர்.