வயலப்பாடியில் விசிக சார்பில் மாணவர்களுக்கு நோட்டு, பேனா வழங்கல்
குன்னம், அக். 13: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வயலப்பாடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனா வழங்கப்பட்டன. வயலப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, பேனா ஆகியவற்றை வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் ஆகியோர் வழங்கினார்கள்.நிகழ்ச்சியில், பழனி முத்து, தங்கராசு, முருகேசன், ஆதி மூலம் ,பகவான், வேலு, சுப்பிரமணி, பாண்டியன், பழமலை, திருமா, முத்து மற்றும் சேகர், ராசு, முருகானந்தம், ராமன், சசி, சாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement