தேனூர், கீழப்பெரம்பலூர் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
குன்னம், அக். 13: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட, தேனூர், கீழப்பெரம்பலூர் துணைமின் நிலையங்களில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திரப் பராமரி ப்பு பணிகள் காரணமாக தேனூர், கீழப்பெரம்பலூர் துணைமின்நிலையங்களுக்குட்பட்ட புதுவேட்டக்குடி, காடூர், நமங்குளம், கீழப்பெரம்பலூர்,
Advertisement
கோவில்பாளையம், தேனூர், துங்கபுரம், குழுமூர், வயலப்பாடி, வயலூர், காரைப்பாடி, என்.குடிக்காடு, பழமலைநாதபுரம், கருப்பட்டான்குறிச்சி, வீரமநல்லூர், வேள்விமங்கலம், வெள்ளூர், இலுப்பையூர், மற்றும் கிளியப்பட்டு ஆகிய பகுதிகளில், இன்று காலை 9.45 மணி முதல், பணிகள் முடியும் வரை, மின்வினியோகம் இருக்காது என குன்னம் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Advertisement