பெரம்பலூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
பெரம்பலூர், அக்.13: பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (14ம்தேதி) செவ்வாய்க் கிழமை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.இதுகுறித்து, மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் பொருட்டு, குறைதீர் நாள் கூட்டம் பெரம்பலூர் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (14ம்தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மேகலா தலைமை வகித்து மின் நுகர்வோர்களிடம் குறைகள் தொடர்பான மனுக்களை பெறுகிறார். எனவே, இந்தக் கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனமின்வாரிய செயற் பொறியாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.