பெரியம்மாபாளையம் ஊராட்சியில் திமுக உறுப்பினர்கள் கூட்டம்
குன்னம், செப்.13: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெரியம்மாபாளையம் ஊராட்சியில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி, திமுக இளைஞர் அணி செயலாளர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையின்படி, கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரதுறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன், குன்னம் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் அருண் ஆகியோர் முன்னிலையில் வேப்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் தலைமையில் பெரியம்மாபாளையத்தில் கிளை கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கரூரில் நடைபெற உள்ள கழக முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளுதல், 2026 சட்டமன்ற தேர்தலில் கழக வெற்றியை உறுதிப்படுத்துதல், கழக பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கிளை கழக செயலாளர் பெரியசாமி, ஒன்றிய துணைச்செயலாளர் பாலுச்சாமி, மாவட்ட பிரதிநிதி புகழேந்தி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் முத்துச்செல்வம், பிஎல்ஏ பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.