பெரம்பலூரில் கூட்டுறவுப்பணிக்கு எழுத்துத்தேர்வு 465 பேர் ஏழுதினர்
பெரம்பலூர், அக். 12: பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவன உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மண்டலத்தில் கூட்டுறவு சங்காங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 39 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்விற்கு 551 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் தனலெட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தேர்வு நடந்தது. இதில் 465 பேர் தேர்வு ஏழுதினர். 86 பேர் தேர்வுக்கு வரவில்லை. பெரம்பலூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய தலைவர், மற்றும் இணைப்பதிவாளர் பாண்டியன் மேற்பார்வையில் தேர்வு நடந்தது.
Advertisement
Advertisement