சு.ஆடுதுறை ஊராட்சியில் கிராம சபா கூட்டம்
குன்னம், அக். 12: வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சு.ஆடுதுறை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி செயலர் சுமதி செல்வம் தலைமையிலும் வயலப்பாடி ஊராட்சியில் செயலர் முருகதாஸ் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதேபோல் வசிஷ்டபுரம் ஊராட்சியில் ஊராட்சி செயலர் சங்கர், நன்னை ஊராட்சியில் ஊராட்சி செயலர் சுதந்திரா, பெண்ணகோணம் ஊராட்சியில் ஊராட்சி செயலர் சுதா கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் ஊராட்சி செயலர் முருகதாஸ், அசூர் ஊராட்சியில் ஊராட்சி செயலர் தேவேந்திரன், குன்னம் ஊராட்சியில் ஊராட்சி செயலர் ராஜேந்திரன், அந்தூர் ஊராட்சியில் தங்கராசு, ஆண்டி குரும்பலூர் ஊராட்சியில் பழனிவேல், புது வேட்டக்குடி ஊராட்சியில் வெங்கடாஜலபதி சித்தளி ஊராட்சியில் ராஜா சிறு மத்தூர் ஊராட்சியில் பழனிவேல் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.கே.சேகர் அறிவழகன் ஆகியோர் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.