அகரம்சீகூர் கிளை திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
குன்னம், செப்.12: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் அகரம்சீகூர் ஊராட்சியில் திமுக கிளைக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன், குன்னம் சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் அருண் ஆகியோர் முன்னிலையில், வேப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நீலமேகம் தலைமையில் அகரம்சீகூர், வதிஷ்டபுரம் ஊராட்சியில் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருகிற 17ம் தேதி கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளுதல், 2026 சட்டமன்ற தேர்தலில் கழக வெற்றியை உறுதிப்படுத்துதல், கழக பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி சண்முகம், வதிஷ்டபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி பன்னீர்செல்வம், கிளைக் கழக நிர்வாகிகள் அன்பு, தனபால், மெய்யன்துரை, சுப்ரியா வெங்கடேசன், இளைஞர் அணி செயலாளர் அன்புசெல்வன், தகவல் தொழில்நுட்ப பணி சிவனேசன், சுரேஷ் மற்றும் கலைவாணன், தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.