பேரளி துணைமின் நிலைய பகுதிகளில் இன்று மின்தடை
குன்னம், செப்.12: பெரம் பலூர் மின்வாரிய உதவி செயற்பொறியளர் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (12ம் தேதி) பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், செங்குணம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம் ஆகிய கிராமங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement