பெரம்பலூரில் கோயில் கடை உரிமையாளர்கள் கூட்டம்
பெரம்பலூர், செப்.11: பெரம்பலூரில் கோயில் கடை உரிமையாளர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் நகரிலுள்ள மரகதவல்லி தாயார் சமேத மதன கோபாலசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான கடைகள் நடத்தும் உரிமையாளர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் நேற்று திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி அறிவுறுத்தலின்படி, திருக் கோயில் மண்டபத்தில் நடை பெற்றது.
Advertisement
இந்தக் கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் சார்பாக அறங்காவலர் நியமனக்குழு தலைவர் கலியபெருமாள் மற்றும் செயல் அலுவலருக்கு வரவேற்பு அளித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் கடை வாடகைகளை நிர்ணயிப்பது தொடர்பாகக் கலந்தாய்வு நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் திருஞானம் மற்றும் அனைத்து கடைஉரிமையாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
Advertisement