வேப்பூர் மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம்
குன்னம், செப். 11: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி வேப்பூர் மேற்கு ஒன்றியம் கீழப்புலியூர் கிளைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சிறுமத்தூர், பெருமத்தூர் நன்னை, ஒகளுர், அத்தியூர் சு ஆடுதுறை பெண்ணக்கோணம், திருமாந்துறை ஆகிய ஊராட்சிகளில் வேப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமையில் கிளைக் கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் ஜெகதீசன், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏகே.அருண் ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை படிவம் பெறுதல் மற்றும் இளைஞர் அணி துணைக் கழகம் அமைத்தல் குறித்த ஆக்க பணிகள் குறித்து எடுத்துரைத்தனர். கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் சன் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கு.க.அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் குடியரசு, மாவட்ட ஆதி நல குழு அசோக்குமார் தகவல் தொழில்நுட்ப அணி சிவனேசன் உட்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.