பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயில் அறங்காவலர் குழு நியமன தலைவர், உறுப்பினர்கள் பதவியேற்பு
பெரம்பலூர், செப். 11: பெரம்பலூர் நகரில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி திருக்கோயிலில் நேற்று பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழு நியமனத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி கலந்து கொண்டு, பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழு நியமனத் தலைவராக பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவருக்கும், உறுப்பினர்களாக தழுதாழை டி.சி.பாஸ்கர், சண்முகம், ராமச்சந்திரன், கோகிலா. ஆகியோருக்கும் பதவி பிரமாணங்களை செய்து வைத்தார்.
இந்த பதவியேற்புவிழாவில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், பெரம்பலூர் அட்மா தலைவர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக பதவி ஏற்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினர்.
நிகழ்ச்சியில் , இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் உமா, செயல் அலுவலர்கள் அசனாம்பிகை, ரவிச்சந்திரன், ஹேமாவதி, ஸ்ரீதேவி உட்பட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பெரம்பலூர் ராஜா ஸ்டோர்ஸ் மகேஸ்வரன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின்னர் திருக் கோயில்களின் பிரசாதங்களை பெற்று கொண்டனர்.