பாடாலூரில் சோமு.மதியழகன் 2-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
பாடாலூர்,அக்.10: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக முன்னாள் செயலாளரும், மாவட்ட முன்னாள் கவுன்சிலருமான சோமு.மதியழகன் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி காலமானார். அன்னாரின் மறைவையொட்டி 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் உள்ள சோமு.மதியழகன் இல்லத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அருண், சோமு.மதியழகன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதை தொடர்ந்து சோமு.மதியழகனின் மனைவி சந்திரா, மகன் பாரி, மருமகள் மனோரஞ்சனி, மகள் திவ்யா, சகோதரர் பாலமுருகன், குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர்.சிவசங்கர், ஒப்பந்ததாரர் சிதம்பரம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் அவைத் தலைவர் ராஜகோபால், பிரதிநிதி பிரபாகரன், கிளைச் செயலாளர் இளங்கோவன், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய பிரமுகர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் உள்பட ஏராளமானோர் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.