ரோவர் கல்விக்குழுமம் நடத்தும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்
பெரம்பலூர், செப்.10: ரோவர் கல்விக்குழுமம் மற்றும் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவமனை இணைந்து, பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சியை, ரோவர் கல்விக்குழுமத் தலைவர் டாக்டர் கி.வரதராஜன் மற்றும் துணைத் தலைவர் ஜான் அசோக் வரதராஜன் தலைமையேற்று இலவச மருத்துவமுகாமை துவக்கி வைத்தனர்.முகாமில், பொது வைத்தியம், காது-மூக்கு-தொண்டை (ENT), கண், பல் மற்றும் எலும்பியல் சிகிச்சை மருத்துவ பரிசோதனைகள் சிறப்பு மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
இந்த முகாமின் மூலம் மொத்தம் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பயனடைந்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தேவையான பரிசோதனைகள், சிகிச்சை ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமிற்கான, ஏற்பாடுகளை ரோவர் கல்வி குழுமத்தின் தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன் மற்றும் ரோவர் கல்வி குழுமத்தின் இயக்குனர் சக்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.