மருத்துவ கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
அரியலூர், அக்.9: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், இணைய குற்றப்பிரிவு காவல்துறையினர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறையினர் இணைந்து அரியலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு, போக்சோ சட்டம், குழந்தை திருமணம் இணைய குற்றங்கள், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், மற்றும் காவல் உதவி செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இணைய குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் இசைவாணி (குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு பொறுப்பு), மற்றும் சமூக நீதி & மனித உரிமைகள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுமதி ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வின் போது, அரியலூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.