வேப்பூரில் சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு ஆலோசனை கூட்டம்
குன்னம், நவ. 6: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் வேப்பூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக சிறப்பு தீவிர வாக்காளர் சீராய்வு பற்றிய ஆலோசனை கூட்டம் வேப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, வேப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு நீலமேகம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார்.
தொடர்ந்து, திமுக வக்கீல் செந்தில்நாதன் சிறப்பு தீவிர திருத்தம் பற்றி விளக்கம் கட்சி நிர்வாகிகளுக்கு விளக்கம் அளித்தார் இதில் கட்சி நிர்வாகிகள் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். தொடர்ந்து, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் திமுக ஓட்டுகளை வாக்காளர்களை நீக்க வேண்டும் என்பதற்க்காவே இந்த எஸ்ஐஆர் கொண்டு வரப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார் எனவே நாம் தெளிவாக இருந்து அவர்கள் கொடுக்கும் படிவத்தை தெளிவாக படித்து அவர்கள் கேட்க்கும் அனைத்து சான்றிதழ்களையும் அளித்து படிவத்தை பூர்த்தி செய்து சரி செய்ய வேண்டும் என்றும் நமது கட்சி வாக்காளர்கள் ஓட்டு ஒன்று கூட விடுபட கூடது எனவே அதற்கு நீங்கள் இந்த பணியை சிறந்த முடிக்க வேண்டும் என்றார்.
கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் எஸ்ஐஆர் பற்றி விளக்கம் அளிக்கும் கால அட்டவணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் அண்ணன் கருணாநிதி அவர்கள் முன்னாள் வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் அண்ணன் செல்லப்பிள்ளை மாவட்ட பிரதிநிதி சண்முகம் பழனிவேல் துணைச் செயலாளர் ஞானசேகரன் கனிமொழி பன்னீர்செல்வம் கிழுமத்தூர் வெங்கடேசன் குன்னம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் சிவனேசன் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் இளைஞர் அணி அமைப்பாளர் அன்புச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.