பெரம்பலூர் அஞ்சல்துறை ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர்,அக்.29: பெரம்பலூரில் இந்திய அஞ்சல்துறை சார்பில் ஊழல் ஒழிப்புவார விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.இந்திய அஞ்சல் துறை சார்பில் அக்டோபர் 27ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதிவரைவிஜிலென்ஸ் அவார்னஸ் வீக் எனப்படும் லஞ்ச ஒலிப்பு வாரவிழாவை கொண்டாடப்பட்டு வருகிறது.லஞ்ச ஒழிப்பு வார விழாவை முன்னிட்டு பெரம்பலூர் உட்கோட்டம் மூலம் பெரம்பலூரில் நேற்று (28ஆம் தேதி) காலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காலை 7 மணிக்கு பெரம்பலூர் நகரில் காமராஜர் வளைவுப் பகுதியில் தொடங்கி பெரம்பலூர்- ஆத்தூர் சாலையிலுள்ள பாஸ்போர்ட் அலுவலகம்வரை, 500மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணிக்கு, பெரம்பலூர் போஸ்ட் மாஸ்டர் கதிரவன் தலைமை வகித்தார். 25-பேர்கள் பங்கேற்ற இந்தப் பேரணியில், பெரம்பலூர் உட்கோட்டத்தின் தலைமை அலுவலர் பாஸ்கர் மற்றும் தபால்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.