புதுவேட்டக்குடி குவாரியில் விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்பு படையினர்
Advertisement
குன்னம், அக். 28: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் புதுவேட்டக்குடி சாலையில் உள்ள தனியார் குவாரியில் உள்ள தண்ணீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு படையினர்.
வேப்பூரை சேர்ந்தவர் முத்துசாமி (65) இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை வேப்பூர் - புது வேட்டக்குடி சாலையில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கார். நேற்று மதியம் ஆட்டுக்குட்டி ஒன்று அருகில் இருந்த தனியாருக்கு சொந்தமான குவாரியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் தீயணைப்புத் துறையினர் பொறுப்பு அலுவலர் தியாகராஜன் தலைமையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பத்திரமாக ஆட்டினை மீட்டு உரிமையாளர் வசம் ஒப்படைத்தனர். முத்துசாமி தீயணைப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்தார்
Advertisement