பெரம்பலூரில் கல்வித்துறையின் சார்பில் கலைத்திருவிழா போட்டிகள்
Advertisement
பெரம்பலூர், அக்.28: பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் பெரம்பலூர் துறையூர் சாலையிலுள்ள சாரண, சாரணியர் பயிற்சி மையத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வரும் வகையிலான கலைத்திருவிழா போட்டிகளை மாவட்டக் கலெக்டர் மிருணாளினி நேற்று (27ஆம் தேதி) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் தனித்திறமையை வெளிக் கொண்டுவரும் விதமாக ஆண்டு தோறும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப் பட்டு வருகிறது. இதற்காக பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய வட்டார அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவ- மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் தேர்வாகும் நபர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர்
Advertisement