தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனுமுகாம்

பெரம்பலூர், அக்.23: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் எஸ்பி அலுவலகத்தில் நடந்த சிறப்பு மனுமுகாமில் 11 மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நேற்று 11மணிக்கு, எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் சிறப்பு மனுமுகாம் நடை பெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் கலந்து கொண்ட எஸ்பி பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கைகள் மற்றும் புகார்கள் தொடர்பான மனுக்களைப் பெற்றார்.

Advertisement

இந்த சிறப்பு மனுமுகாமில், பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) கோபாலச் சந்திரன் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்கலமேடு, அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர் காவல் நிலையங்கள், பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு, பெரம்பலூர் மாவட்ட குற்றப் பிரிவு, பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு, பெரம்பலூர் மற்றும் மங்கள மேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெரம்பலூர் நகரம் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு காவல் நிலையங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் இந்த மனு முகாமில் கலந்துகொண்டனர். இந்த சிறப்புமனுமுகாம் மூலம் 11-மனுக்கள் பெறப்பட்டு, சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.

முகாமில் பேசிய மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா, ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில், சிறப்பு மனு விசாரணை முகாம் நடை பெறும். பொது மக்கள் இந்த சிறப்பு முகாமினை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனு விசாரணை முகாமில் கலந்துகொள்ள வருபவர்கள் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகம் வருவதற்கு ஏதுவாக, பெரம்பலூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக பாலக்கரையிலிருந்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கும், மீண்டும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து புதுபஸ்டாண்டு செல்லவும் ஏதுவாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Advertisement

Related News