வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா
Advertisement
குன்னம், செப்.22: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு உயர்கல்வி துறை வழிகாட்டுதலின் படி கல்லூரி கலை திருவிழா 2025 கடந்த 16ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் மாணவிகளின் பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக மாணவிகளுக்கு 46 வகையான போட்டிகள் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் மாணவிகள் அனைவரும் பங்கு பெற்று பயனடையுமாறு கல்லூரி முதல்வர் மணிமேகலை ஜெயபால் தெரிவித்துள்ளார்.
இந்த கலைத் திருவிழாவில் கவிதை போட்டி, சிறுகதை போட்டி, போட்காஸ் போட்டி, பேச்சுப்போட்டி, வர்ணனைப் போட்டி, பட்ஜெட் போர், தனிப்பாடல், வாத்திய இசை, சொல்லிசை போட்டி, பாடல் வரிகள் எழுதி பாடும் போட்டி, தனி ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.
Advertisement