பெரம்பலூரில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Advertisement
பெரம்பலூர், ஆக.19: பெரம்பலூரில் சிஐடியூ சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியூ சார்பாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று (18ம் தேதி) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகவும், தூய்மைப் பணியாளர் மீதான தாக்குதலைக் கண்டித்தும் இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியூ சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியூ பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட நிர்வாகிகள் ரெங்கநாதன், ரெங்கராஜ், செல்வி, கருணாநிதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சந்திரன், பிரகாஷ் பரமசிவம், குண சேகரன், மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Advertisement