பாடாலூர் அருகே குட்கா விற்றவர் கைது: 8 கிலோ பறிமுதல்
பாடாலூர், அக. 12: பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க எஸ்பி ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் போலீசார் அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விஜயகோபாலபுரம் கிராமத்தில் ஒருவரது கட்டடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றது தெரிய வந்தது. விரைந்து சென்றபோலீசார் குட்கா விற்றவரை சுற்றிவளைத்தனர். விசாரணையில் பெருமாள் மகன் தங்கராஜ் (63). என்பது தெரியவந்தது. அவரை பாடாலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். எஸ்ஐ ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்தார். அவரிடமிருந்து 8 கிலோ 143 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது.