இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் எஸ்.பி திடீர் ஆய்வு
ஜெயங்கொண்டம், செப்.3: அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் அரியலூர் மாவட்ட எஸ்பி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காவல் நிலையம் மற்றும் அதன் சுற்றுப்புறம், காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், குற்றப்பதிவேடுகள், நிலுவையில் உள்ள வழக்கு கோப்புகளை பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணகுமார் உடன் இருந்தார். மேலும், வழக்குகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தியதோடு, போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
Advertisement
Advertisement