இளைஞர், மகளிர் தொழில் தொடங்க மானியத்துடன் கடன்பெற அழைப்பு
தா.பழூர், செப்.3: அரியலூர் மாவட்டம் சோழமாதேவியில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் சுயதொழில் பயிற்சி மைய த்தின் மூலம் செப்டம்பர் மாதம் 11ம் தேதி முதல் 26ம் தேதி வரை 13 நாள் பயிற்சியாக வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் தொழில் முனைவோர் மற்றும் அதற்கான அரசு திட்டங்கள் பற்றிய பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மகளிர் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
பயிற்சியில் கலந்து கொள்ள தகுதி 18 வயது முதல் 50 வயது வரை எனவே இப்ப பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் கீழ்க்கண்ட அலைபேசியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்வதின் அடிப்படையில் முதல் 30 நபர்கள் மட்டுமே பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சி பெற்ற பிறகு தங்களது தகுதிக்கேற்ப மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்கள் வேளாண்மை சார்ந்த தொழில்கள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என கிரீடு வேளாண் அறிவியல் மையம் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகு கண்ணன் தெரிவித்துள்ளார்.