வரும் 10ம் தேதி அரியலூரில் சிறுபான்மையினருக்கான ஆய்வு கூட்டம்
அரியலூர்,செப். 3: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது: சிறுபான்மையினர் அமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருண் சே.ச,தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வருகின்ற செப் டம்பர் 10 (புதன் கிழமை) அன்று அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.
Advertisement
சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளையும் 10.09.2025 (புதன்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் மற்றும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.இவ்வாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Advertisement