தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலி மதுபாட்டில்கள் விவகாரம்: டாஸ்மாக் கடை பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், செப்.2: தமிழ்நாடு டாஸ்மாக் கடை பணியாளர்கள் அனைத்து சங்கத்தின் கூட்டுக்குழு-அரியலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளர்கள், காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு போதிய பணியாளர்களும், இட வசதியும் இல்லாததால் மாற்று ஏற்பாடு மூலம் காலி மது பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுபான பாட்டில்கள் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கரை மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்க வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement

செப்டம்பர் 1ம்தேதி முதல் அரியலூர் மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதால், தமிழ்நாடு டாஸ்மாக் கடை பணியாளர்கள் அனைத்து சங்கத்தின் கூட்டுக்குழு சார்பில் தமிழக டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் குணசேகரன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சியப்பன் மற்றும் சூபர்வைசர்கள், சேல்ஸ் மேன்கள் என மொத்தம் 50 பேர் நேற்று பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான மொத்த விற்பனை கிடங்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்திலுள்ளபெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட மேலாளர் முத்து கிருஷ்ணன் என்பவரிடம், மதுபான பாட்டில்கள் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கரை திரும்ப கொடுக்க வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது மாவட்ட மேலாளர் முத்துக் கிருஷ்ணன் உயர் அதிகாரிகளுடன் கலந்துபேசி தீர்வு கூறுவதாக கூறியதால், டாஸ்மாக் பணியாளர்கள் மதுபான பாட்டில்கள் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கரை அரியலூர், ஜெயங்கொண்டம் சப்.டிவிஷன் அலுவலகத்தில் வைத்து விட்டுதான் கடைக்கு செல்வோம், மதுபான பாட்டில்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெற மாட்டோம் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement