ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர், மார்ச் 29: குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7 ஆயிரத்து850 வழங்கிட கோரி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ 7 ஆயிரத்து 850 வழங்கிட வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், மாத இறுதி நாளில் ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும், நிலுவையில் இருந்து வரும் பண பலன்களை வழங்கிட வேண்டும் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.