மலேசியாவில் சிலம்பாட்டம் பரமக்குடி மாணவர்கள் பதக்கங்கள் வென்றனர்
பரமக்குடி, ஜூன் 8: மலேசியாவில் சர்வதேச சிலம்ப கழகம் மற்றும் மலேசிய சிலம்ப கழகம் சார்பில் சர்வதேச சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் மற்றும் பரமக்குடி பகுதி சிலம்பாட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஜூனியர் 7-9 வயதுக்குட்பட்ட தனித்திறமை போட்டி, நேரடி கம்பு சண்டை போட்டியில் அல்மிர்பசிர் வெற்றி பெற்று இரண்டு தங்க பதக்கங்களை வென்றார்.
Advertisement
சப்-ஜூனியர் பெண்கள் பிரிவு தனிதிறமை போட்டியில் திபிக்ஷா வெள்ளி பதக்கமும், 10-12 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவில் விஜய விகாஷ் வெண்கல பதக்கமும் பெற்றனர். பதக்கம் வென்று தமிழகத்திற்கும், பரமக்குடிக்கும் பெருமை சேர்த்த சிலம்பாட்ட வீரர்களை ராமநாதபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் மலேசியா பாண்டியன், செயலாளர் தில்லை குமரன், பொருளாளர் முத்துராமன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.
Advertisement