பல்லடம் நகராட்சி மன்ற கூட்டம்
பல்லடம், ஜூன் 7: பல்லடம் நகராட்சி மன்ற அவசர கூட்டம் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமையில் மன்ற கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், நகராட்சி ஆணையாளர் மனோகரன், நகராட்சி கவுன்சிலர்கள், பல்வேறு பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
இக்கூட்டத்தில் பல்லடம் நகராட்சி பகுதியில் நத்தம் நில பதிவேட்டில் அரசு புறம்போக்கு வண்டிபாதை என உள்ளதால் 31 பேரின் ஆக்கிரமிப்புகள் வரன்முறைப்படுத்தும் சிறப்பு திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றியும், பல்லடம் அண்ணா மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் வடக்கு புறத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.36.28 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன பொதுக்கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து குத்தகைக்கு பொது ஏலம் விட முடிவு செய்தல் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement