காமராஜர் அரசு பள்ளியில் ஓவிய கண்காட்சி
காரைக்கால், ஜூலை 9: வடமறைக்காடு காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி அமைச்சர் திருமுருகன் திறந்து வைத்தார்.
புதுவை கலைமாமணிகள் நல வாழ்வு சங்கத்தின் சார்பாக காரைக்கால் மாவட்டம் வடமறைக்காடு, காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. கண்காட்சியை புதுச்சேரி கலை பண்பாட்டு துறையின் அமைச்சர் திருமுருகன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி மற்றும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதில் காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியின் ஓவிய ஆசிரியரும், புதுவை கலைமாமணிகள் நலவாழ்வு சங்கத்தின் செயலாளருமான முத்துக்குமார் கைவினைப் பொருட்கள் மற்றும் பள்ளி மாணவிகளின் ஓவியங்கள் இடம்பெற்றன.