முகத்தில் துணியை மூடி மூதாட்டியிடம் நகையை திருட முயன்ற பெயிண்டர் கைது
செய்யாறு: முகத்தில் துணியை மூடி மூதாட்டியிடம் நகையை திருட முயன்ற பெயிண்டரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா பல்லாவரம் நத்த கொலை கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல், மனைவி சரோஜா(80). இவர் குரங்கணில் முட்டம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் தனது மாடுகளுக்கு தேவையான பொருட்களை அறுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த குரங்கணில் முட்டம் கிராமத்தை சேர்ந்த காந்தி மகன் பெயிண்டர் அரவிந்த் (22) இவர் புல் அறுத்துக் கொண்டிருந்த சரோஜாவின் பின் பக்கமாக வந்து முகத்தை துணியால் மூடி இறுக கட்டி நகை பறிக்க முயன்றுள்ளார். அப்போது சரோஜா கூச்சலிட்டார் அப்போது அருகில் நிலத்தில் உள்ளவர்கள் ஓடி வருவதைப் பார்த்து அங்கிருந்து அரவிந்த் தப்பி ஓடி விட்டார். இது குறித்து சரோஜா நேற்று தூசி போலீஸில் புகார் செய்தார். அதன் பெயரில் தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் வழக்குக்பதிவு செய்து தப்பி ஓடிய அரவிந்தை நேற்று கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.