புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு
மல்லசமுத்திரம், ஜூலை 11: மல்லசமுத்திரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை துணை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். மல்லசமுத்திரத்தில் பத்திரப்பதிவு துறையின் சார்பில், ரூ.1.97 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை நேற்று, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். `தொடர்ந்து மல்லசமுத்திரம் சார்பதிவாளர் வானதி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். சேலம் துணை பதிவுத்துறை தலைவர் சுபிதாலட்சுமி, பதிவு செய்த முதல் பத்திரப்பதிவை பயனாளிக்கு வழங்கினார். நாமக்கல் மாவட்ட நிர்வாக பதிவாளர் சிவலிங்கம், மாவட்ட தணிக்கை பதிவாளர் சிவக்குமார், பேரூராட்சி தலைவர் திருமலை, நிர்வாகிகள் ஜாகீர், வடிவேல், முருகேசன், மணல் குமார், ரம்யா கிருஷ்ணமூர்த்தி, மருதாச்சலம், முன்னாள் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் துரைசாமி, ஒப்பந்ததாரர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.