சேரன்மகாதேவியில் கோடைகால இலவச கல்வி மையம் திறப்பு விழா
வீரவநல்லூர்,ஏப்.26: சேரன்மகாதேவியில் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின்படி மேஜிக் பஸ் பவுன்டேசன் சார்பில் போலீஸ் நிலையம் எதிரில் கோடைகால இலவச கல்வி மையம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமை வகித்து இலவச கல்வி மையத்தை திறந்து வைத்தார். இந்த கல்வி மையத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலிஷ், உயர் கல்விக்கான வழிகாட்டுதல் வகுப்பு, வேலைவாய்ப்பு கல்வி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர்கள் பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி பரமசிவன், அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மரகதவல்லி, திமுக நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.