ஊட்டி குறு மைய அளவிலான விளையாட்டு போட்டி துவக்கம்
ஊட்டி, ஜூலை 10: ஊட்டி குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2025-26ம் ஆண்டிற்கான ஊட்டி குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஊட்டியில் உள்ள ஜோசப் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. நேற்று கால்பந்து மற்றும் வாலிபால் போட்டிகள் நடந்தது. போட்டிகளை நீலகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெரியசாமி துவக்கி வைத்தார். ஊட்டி குறு மைய அளவிலான 12 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துக்கொண்டு விளையாடினர். இப்போட்டிகள் தொடர்ந்து 12ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில், 14 வயதிற்கு உட்பட்டோர், 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு போட்டிகள் நடக்கிறது. வெற்றிபெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். போட்டி துவக்க விழாவில், பள்ளி தலைமை தாளாளர் அமல்ராஜ், உடற்கல்வி இயக்குநர்கள் ராஜேஷ், ஜெயக்குமார், ரமேஷ்பாபு, சிவாஜி, முருகமாதன், சிவப்பிரகாஷ், காமேஷ், கிருஷ்ணராஜ், ஜோயல், ரமேஷ், பத்மினி, வாசுகி, கல்பனா, ரோகன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.