டூவீலர் மோதி ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
காரியாபட்டி, ஜூலை 14: மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பணிக்காக திருவண்ணாமலை மாவட்டம், மாதப்பூண்டியைச் சேர்ந்த ஏழுமலை (55), வேட்டவலத்தைச் சேர்ந்த செல்வம் (38), ஏரம்பாக்கத்தைச் சேர்ந்த குமார் (40), சொரத்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (42) ஆகியோர் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு இவர்கள், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரியாபட்டி அருகே கம்பிக்குடியைச் சேர்ந்த இமானுவேல் சாமி என்பவர் ஓட்டி வந்த டூவீலர், 4 பேர் மீதும் மோதியது. இதில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே பலியானார். இமானுவேல் சாமி உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், பலியானவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.