தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் இன்று தொடக்கம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

திருவள்ளூர், ஜூலை 4: திருவள்ளூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண்மை இயக்க திட்டத்தினை காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைக்கிறார். திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) என்.ஜெ.பால்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊட்டச்சத்து வழங்கும் காய்கறிகள் பழங்கள், பயறு வகைகளின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதே ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டமானது பழச்செடிகள் தொகுப்பு, காய்கறி விதைகள் மற்றும் பயறு வகை விதைகள் போன்றவற்றை உள்ளடக்கியது. இத்திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக (4ம் தேதி) இன்று தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.

Advertisement

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு வட்டாரம் மேலப்புடி, ஆர்.கே.பேட்டை வட்டாரம் அம்மனேரி, திருவாலங்காடு வட்டாரம் இலுப்பூர், திருத்தணி வட்டாரம் முருக்கம்பட்டு, பூண்டி வட்டாரம் கச்சூர், கடம்பத்தூர் வட்டாரம் கொப்பூர், திருவள்ளூர் வட்டாரம் சேலை, கும்மிடிப்பூண்டி வட்டாரம் புதுவாயல், சோழவரம் வட்டாரம் பழைய எருமை வெட்டிபாளையம், மீஞ்சூர் வட்டாரம் சின்னகாவனம், அம்பத்தூர் வட்டாரம் கீழ்க்கொண்டையார், புழல் வட்டாரம் சென்றம்பாக்கம், எல்லாபுரம் வட்டாரம் வண்ணாங்குப்பம், பூந்தமல்லி வட்டாரம் கருணாகரச்சேரி ஆகிய கிராமங்களில் இத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் - தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

Related News