ஜிஹெச்சில் காலிப்பணியிடம் நிரப்பக்கோரி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் பெருந்திறல் முறையீடு
திருச்சி, ஜூலை 11: மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களை 11 மாதம் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்துவதை அரசு கைவிட விலயுறுத்தி பெருந்திறல் முறையீடு நடந்தது. திருச்சி மாவட்ட தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று பெருந்திறல் முறையீடு நடந்தது. இதில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணியிடங்களை ஒப்பந்த முறையில் 11 மாதம் தற்காலிகமாக நல்வாழ்வு சங்கங்கள் மூலம் பணியமர்த்தும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாவட்ட தலைவர் சித்ராதேவி தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் நந்தினி வரவேற்றார். மாநில இணை செயலாளர் கலையரசி கோரிக்கை விளக்க உரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் முத்துமணி, டிஎன்ஜிஇஏ மாநில துணைத்தலைவர் சல்வராணி ஆகியோர் நன்றி கூறினார்.