ஓணம் பண்டிகையை முன்னிட்டு பொருட்களை வாங்க பாலக்காடு கோட்டை மைதான மார்க்கெட்டில் அலை மோதிய மக்கள்
பாலக்காடு, செப். 3: பாலக்காடு கோட்டைமைதானத்தில் ஓணம் திருவிழாவையொட்டி மார்கெட்டில் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கேரளாவில் ஓணம் திருவிழா கடந்த அத்தம் நட்சத்திரநாள் முதல் திருவோணப்பண்டிகையை வரவேற்றவண்ணம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் அனைவரும் வீடுகளின் முன்பாக அத்தப்பூக்கோலம் அமைத்தும், அரசு மற்றும் தனியார் அலுவலங்களிலும் அத்தப்பூக்கோலம் அமைத்து கொண்டாடி வருகின்றனர்.
பாலக்காடு கோட்டை மைதானத்தில் ஓணம் திருவிழாவை முன்னிட்டு சப்ளைக்கோவின் ஓணம் மார்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் மளிகைப்பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகரித்து வந்தவாறு உள்ளது. இதனால், தரமான பொருட்களை குடும்பத்துடன் வந்து மக்கள் பார்த்து பார்த்து வாங்கி செல்கின்றனர். ரேஷன் கடை நுகர்வோர்களுக்கு மானியவிலையில் ரேஷன் பொருட்கள் அமோகமாக நடைபெற்று வருகின்றன. மேலும், களி மண்ணில் வடிவமைக்கப்பட்டுள்ள மகாபலியின் உருவபொம்மைகள், மண்பாண்டங்கள் ஆகியவைவைகளை வீடுகளுக்கு வாங்கி சென்றவாறு உள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் விவசாயினர் விளைவிக்கப்பட்டுள்ள நாட்டுக்காய்கறிகள் குறைந்த விலைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகின்றன.