எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்ற பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அலுவலருக்கு பாராட்டு
கூடலூர், நவ.28: கூடலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் கூடலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
Advertisement
இப்பணிகளில் சிறப்பாக பணியாற்றி பதிவேற்ற பணிகளை முடித்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் குமரன், மைதிலி, சத்தியபாமா, சந்திரிகா மற்றும் மேற்பார்வையாளர் நாசர் அலி ஆகியோருக்கு நேற்று ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ கலந்து கொண்டு சால்வை அணிவித்து கேடயங்களையும் ஊக்க தொகையாக தலா 1000 ரூபாயும் வழங்கினார்
Advertisement