கேரளாவில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளிலும் வேட்பாளர்கள் பெயர்
பாலக்காடு, நவ. 27: கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் டிச. 9ம் தேதி முதற்கட்டமாகவும், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் டிச. 11ம் தேதி இரண்டாவது கட்டமாகவும் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இதனையொட்டி மொழிச்சிறுபான்மை பகுதிகளான திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய மொழிச்சிறுப்பான்மையினர் வசிக்கின்ற வார்டு தலங்களில் தமிழ் மொழியிலும், காசர்கோடு மாவட்டத்தில் கன்னடம் மொழியிலும் வேட்பாளர்கள் பெயர்கள் பதிவிடப்படவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திருவனந்தபுரம் மாநகராட்சியில் வலியசாலா, கரமண் வார்டுகளிலும், காசர்கோடு நகராட்சியில் 18 வார்டுகளில் கன்னடம்மொழியிலும் வேட்பாளர்கள் பெயர்கள் பதிவிடப்படும்.
கொல்லம் மாவட்டத்தில் குளத்துப்புழா, ஆரியன்காவு கிராமப்பஞ்சாயத்துகளில் ஐந்து வீதம் வார்டுகளிலாகளிலும், பத்தனம்திட்டா மாவட்டம் சீதத்தோடு கிராமப்பஞ்சாயத்தில் ஹவி வார்டிலும், மலையாளப்புழா கிராமப்பஞ்சாயத்தில் இரண்டு வார்டுகளிலும், இடுக்கி மாவட்டத்தில் 22 கிராமப்பஞ்சாயத்துகளிலாக 229 வார்டுகளிலும், பாலக்காடு மாவட்டத்தில் ஆறு கிராமப்பஞ்சாயத்துகளில் 93 வார்டுகளிலும், வயநாடு மாவட்டத்தில் தவிஞ்ஞால் கிராமப்பஞ்சாயத்தில் கைதக்கொல்லி வார்டுகளில் தமிழ் மொழியில் பெயர்கள் பதிவிடப்படும் தேர்தல் ஆனையம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.