ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் பேரவை கூட்டம் நாளை நடக்கிறது
ஊட்டி, டிச. 4: நீலகிரி மாவட்ட தலைவர் நஞ்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் நீலகிரி மாவட்ட சங்கத்தின் 57ம் ஆண்டு பேரவை கூட்டம் வரும் 5்ம் தேதி (நாளை) 11 மணிக்கு ஊட்டியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் கோவை மண்டல தலைவர் வெங்கடாசலம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். 75 வயது பூர்த்தியடைந்த ஓய்வூதியர்களை கவுரவித்தல், ரூ.1000ம் செலத்தி புரவலர்களை கவுரவித்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து, சங்க உறுப்பினர்ள் தேர்தலும் நடக்கிறது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Advertisement
Advertisement